ஆலிவர் என்னும் ஆப்பிரிக்க மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை தனது பிறந்த நாளை கொண்டாட இருந்தவருக்கு நடைபெற்ற இச்சோக சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஆலிவர் தனது மேற்படிப்பிற்காகவும், நல்ல வேலை கிடைக்கவேண்டுமென்பதற்காகவும் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வசித்து வருகிறார். அவரது நண்பர்ம் சேம் கூறும்போது "ஆலிவர் ஒரு நல்ல மாணவன். எந்த வம்புக்கும் செல்பவன் அல்ல, சனிக்கிழமை அவனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக பணம் தேவைப்பட்டது. அதற்காக தனது நண்பனிடம் கடன் வாங்க சென்ற போது மர்ம நபர்களை அவனை கடுமையாக தாக்கி கொலை செய்துவிட்டார்கள். அவன் யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுத்ததில்லை. அவனுடைய உயிர் அநியாயமாக பரிபோயுள்ளது. நாங்கள் இந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருக்கிறோம் என்று நினைத்தே ஆப்பிரிக்க மக்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. நாங்கள் முறையான விசா பெற்றே இங்கே வசிக்கிறோம். எங்களுடைய இரண்டாவது தாய் நாடாகவே இந்தியாவை நேசிக்கிறோம். ஆலிவருக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வு வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. உடனடியாக குற்றவாளிகளை பிடித்த தகுந்த தண்டனை வழங்கவேண்டும்" இவ்வாறு ஆலிவர் நண்பர் சேம் கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் பல இடங்களில் ஆப்பிரிக்க நாட்டவர்கள் மீது மர்ம நபர்கள் தாக்கியச்சம்பவம் பெரும் சர்ச்சையாகியது. மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆப்பிரிக்க மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஒரு ஆப்பிரிக்க மாணவனை கொலை செய்யும் அளவிற்கு இப்பிரச்சனை விஷ்வரூபம் எடுத்துள்ளது.
No comments:
Write comments