Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 30, 2016

ஆக்சிஜனுக்கு பதிலாக அனஸ்தீசியா கொடுத்ததால்இரு குழந்தைகள் மரணம்



இந்தூர்: 5 வயது சிறுவன் ஆயுஷ் மற்றும் பிறந்து சில மாதங்களே ஆன ரஜ்வீர் என்ற குழந்தை ஆகிய இருவருக்கும் ஆக்ஸிஜன் கொடுப்பதற்கு பதிலாக அனஸ்தீசியா என்ற மயக்க மருந்தை கொடுத்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அரசு மருத்துவமனையான மஹராஜா யஷ்வந்த் ராவ் மருத்துவமனையில்தான் இந்த துயர‌ சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த மே 27ஆம் தேதி ஹெர்னியா அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஆயுஷ் என்ற 5 வயது சிறுவன் இறந்துபோனான், இறந்ததற்கான காரணத்தை அறிவதற்கு முன்னால் அடுத்த நாளே ரஜ்வீர் என்ற சில மாதங்களே ஆன குழந்தையும் உயிரிழந்தது. இவ்விரு மரணங்களும் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் மரணத்திற்கான காரணங்களை கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அந்த மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ஆக்ஸிஜன் செலுத்தும் பைப்பில் நைட்ரஜன் வாயு (அனஸ்தீஸியா) ஏற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இதனாலேயே அவ்விரு குழந்தைகளும் அநியாயமாக இறந்துள்ளது என கண்டறியப்பட்டது. இதனால் அம்மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டருக்கு சீல் வைத்ததோடு, அங்கு பணி புரிந்த டெக்னீஷியன் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால் என்.ஜி.ஓ அமைப்பின் உறுப்பினர் சுவஸ்தியா கூறும்போது வெறும் கண்துடைப்பிற்காக மருத்துவமனை நிர்வாகம் டெக்னீஷியம் மீது குற்றஞ்சாட்டி கைது செய்ய வைத்திருக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் மருத்துவர்களின் கவனக்குறைவால் இந்த குழந்தைகள் பலியாகியிருக்கிறது. எனவே இதற்கு முக்கிய காரணமாக இருந்த அனைத்து மருத்துவர்களையும் உடனடியாக பணியிலிருந்து நீக்கி அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic