7 மீனவர்களையும் அவர்கள் கொண்டு சென்ற படகையும் இலங்கை கடற்படை இராணுவம் சிறைபிடித்தது. இராமேஸ்வரம் மீனவர் நேற்று நள்ளிரவு மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். இந்தியாவின் எல்லைப்பகுதியான கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்து இலங்கை கடற்படை இராணுவம் தமிழ மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தது. அதில் 7 மீனவர்கள் சென்ற படகை சிறைபிடித்து அவர்களையும் கைது செய்துள்ளார்கள்.
இலங்கை கடற்படை அதிகாரிகள் மன்னார் கடற்படை முகாமிற்கு தமிழக மீனவர்களை கொண்டு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு பின் 7 மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. இராமேஸ்வரம் மீனவ மக்களிடையே இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையுடனான நல்லுறவில் ஈடுபட்டு வரும் இந்தியா ஏன் தமிழ மீனவர்கள் பிரச்சனைக்கான ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர மறுக்கிறது என்பதே அம்மக்களின் கேள்வியாக இருக்கிறது.
No comments:
Write comments