இந்தியாவின் பிரபல முன்னால் கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் பின்னனி பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோரி கேலி செய்யும் வகையில் பாலிவுட் காமெடி நடிகர் தன்மய் பட் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவர் எதிர்பார்த்தாரோ என்னவோ தெரியவில்லை அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சச்சின் மற்றும் லதா மங்கேஷ்கர் இருவரின் முகம் போன்று எடிட் செய்து ஒருவரையொருவர் விமர்சிப்பது போன்று வீடியோவை பதிவு செய்திருக்கிறார் தன்மய்.
இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருதை பெற்ற இருவரை இவ்வாறு கேலி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என பா.ஜ.க, சிவசேனா உட்பட பல கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்த இந்த வீடியோவை அழிக்கும் முயற்சியில் அனைத்து சமூக வலைதளங்களையும் போலிஸார் தொடர்பு கொண்டு வருகிறார்கள். காமெடி என்கிற பெயரில் அடுத்தவர்களின் மனது புண்படும்படியான வீடியோவை தயார் செய்து வெளியிட்ட அந்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நடிகருக்கு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
No comments:
Write comments