இது இந்திய மக்கள் தொகையில்ன் 1.4% ஆகும் எனவும் என மனித உரிமை அமைப்பு இந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த கணக்கெடுப்பில் மூலம் ஆய்வு செய்த போது எல்லாவிதமான நவீன அடிமைத்தனம் இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருவதாகவும், அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியன் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
உலகம் முழுவதில் 45 மில்லியன் மக்கள் அடிமைகளாக வாழ்வதாகவும் அதில் 58% மக்கள் இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்காளதேசம் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் என்றும் தெரிவிக்கிறது. இந்த கணக்கெடுப்பு இந்தியாவில் 15 மாநிலங்களில் கிட்டதட்ட 80% மக்களிடம் நடத்தப்பட்டிருக்கிறது. சிறுமிகள் அதிகமாக பாலியல் தொழிலுக்கு ஆட்படுத்தப்படுவதாகவும் இது தொடர்பான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதையும் இது சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதும், பாலியல் தொழில் செய்வதற்கு கட்டாயப்படுத்துவதும் 1976ல் குற்றச்செயலாக சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் மக்களின் ஏழ்மை நிலையை உணர்ந்து பல அவர்களை இத்தகைய தொழிலுக்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் நாட்டுக்குள்ளேயே கொத்தடிமைகளாக விற்கப்படுகிறார்கள்.
கிராமப்புரங்களில் வாழும் ஏழை மக்கள் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாமல் இவ்வாறான கஷ்டங்களுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள், கருத்துக்கணிப்பில் ஒரு பெண்மணி கூறும்போது தன் கணவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் கொத்தடிமையாக அவரை கொண்டு சென்று விட்டதாகவும், ஏதோ ஒரு காட்டில் வைத்து வேலை வாங்கி வருவதாகவும், அதிலிருந்து அவர் வெளியே வரமுடியாத வகையில் அவரை அடைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். மற்றொரு பெண் தான் வாங்கி கடனை திருப்பி செலுத்தாததால் அவ்வப்போது தனக்கு பாலியல் தொந்தரவு இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இத்தகைய மோசமான ஒரு நிலைப்பாட்டில் மக்கள் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும்போது இந்தியா வளர்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று பெருமை பீத்திக்கொள்வதில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதே எதார்த்தம்.
No comments:
Write comments