அரவக்குறிச்சி, தஞ்சை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்காணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த லக்காணி கூறும்போது,
சென்னை உள்ளிட்ட பல தொகுதிகளில் ஏன் வாக்குப்பதிவு குறைந்தது என்பதற்கான காரணத்தை கண்டறிய கல்லூரி மாணவ மாணவிகளை வைத்து ஆய்வு செய்து அதனை இனி வரும் காலங்களில் சரி செய்யப்படும். தேர்தல் வரவு செலவு கணக்குகளை வேட்பாளர்கள் வருகின்ற ஜூன் 19குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்படும். இதனை மீறுபவர்கள் அடுத்த தேர்தல்களில் வேட்பாளராக போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.
திமுகவின் அப்பாவு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இதனால் அந்த தொகுதியின் வாக்குப்பதிவை மீண்டும் எண்ண வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் தொடர்பான புகார்களை கூறவேண்டுமானால் இனி நீதிமன்றத்தைதான் நாடவேண்டும் என்று கூறினார்.
திமுக வேட்பாளர் அப்பாவு குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால், மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். தேர்தல் தொடர்பான புகார் கூற வேண்டுமானால் இனி வேட்பாளர்கள் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும். சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் 750க்கும் மேல் வாக்காளர்கள் இருந்தால், அதன் அருகே வாக்குப்பதிவு மையம் அமைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து வருகிறது. அதனால், வரும் தேர்தலுக்கு முன் இதுபற்றி ஆலோசனை செய்து இறுதி முடிவு செய்யப்படும்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் உடல் நலக்குறைவால் மரணித்துவிட்டதால், அத்தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும். அத்தோடு ஏற்கனவே தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட தொகுதிகளான அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை ஆகிய தொகுதிகளுக்கு இணைந்து ஒரே நாளில் வாக்குப்பதிவை நடத்தலாமா? என ஆலோசித்து வருவதாக ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
No comments:
Write comments