மெட்ராஸ் படத்தை இயக்கிய ரஞ்சித் கபாலியை இயக்குகிறார். மெட்ராஸ் பிரம்மாண்ட ஹிட் என்பதால் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. மேலும் கலைப்புலி தாணு இப்படத்தை தயாரிக்கிறார் என்றதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை கிளப்பியது கபாலி. சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீஸர் இதுவரை இல்லாத அளவிற்கு ஹிட்ஸ்களை அள்ளியது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவடைந்தன. அனோகமாக ஜூலையில் கபாலி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
கபாலி படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் அனைவரையும் கவர்ந்தது உண்மை. அதில் ஜாக்கிசானையும் விட்டு வைக்கவில்லை. கபாலி படத்தின் போஸ்டர் அடங்கிய டீ ஷர்ட்டுடன் ஜாக்கிசான் நிற்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த புகைபடத்தில் ஜாக்கிசான், தான் அணிந்துள்ள கபாலி டீசர்ட்டை சுட்டிகாட்டுவதுபோல் உள்ளது.
ஆனால் இந்த படம் நெட்டீஸன்களால் போட்டோஷாப் செய்யப்பட்டது என்பது பலருக்கு தெரியாத உண்மை. உண்மையில் ஜாக்கிசான் விரலை காட்டும் இடத்தில் வேறொரு படம் உள்ளது. அந்த இடத்தில் கபாலி போஸ்டரை போட்டோஷாப் செய்து நெட்டீசன்கள் பரவ விட்டுள்ளனர்.
ஷப்பா.... இப்பவே கண்ண கட்டுதே...!!!
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments