தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நாளான மே 16-ஆம் தேதி திங்கள்கிழமை தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்காத தொழில் நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
தேர்தல் வாக்குப் பதிவு நாளில், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதி. எனவே, அனைத்துத் தொழில் நிறுவனங்களும் தங்கள் நிறுவனத் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
வாக்குப் பதிவு நாளில், எந்தத் தொழில் நிறுவனமாவது தங்கள் தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்காமலிருந்தால், நாகை தொழிலாளர் அலுவலர் இ. வெங்கடேசனை 95662 81414 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் அல்லது 99654 74196, 85267 68823 ஆகிய கைப்பேசி எண்களில் தொழிலாளர் துணை ஆய்வர், முத்திரை ஆய்வரிடம் புகார் தெரிவிக்கலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments