சமீபத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் பி.வாசு இயக்கிய ‘ஷிவலிங்கா’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் ரீமேக்கில் ரஜினியை நடிக்க வைக்க பி.வாசு பெரும் முயற்சி செய்தார். ஆனால் அந்த சமயத்தில் ரஜினிகாந்த் ‘கபாலி’ மற்றும் ‘2.0’ படங்களில் கமிட் ஆகியதால் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
அதே நேரத்தில் இந்த கதையில் அஜித் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என பி.வாசுவிடம் ரஜினி பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
‘வேதாளம்’ படத்திற்கு பின்னர் அஜித் தற்போது சிறுத்தை சிவா படத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முடித்த பின்னர் அவர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு சரித்திர படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ரஜினியின் கோரிக்கையை ஏற்று அஜித் ‘ஷிவலிங்கா’ தமிழ் ரீமேக்கில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்தி :: சாஹிப்...


No comments:
Write comments