காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தலைவராக காரைக்குடி ராமசாமி தேர்வு செயயப்பட்டுள்ளதாக கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து 41 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சு போட்டியிட்டது. இதில் 8 தொகுதிகளை கைப்பற்றியது. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டமன்ற தலைவர்காகயார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று இழுபறி இருந்து வந்தது.
இந்நிலையில் 6வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்ற காரைக்குடி ராமசாமி சட்டமன்ற தலைவர்காகவும், விளவங்காடு தொகுதி எம்.எல்.ஏ விஜயதாரணி கொறடாவாக செயல்படுவார் என இளங்கோவன் தெரிவித்துள்ளார். மூத்த அனுபவமும் சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்தெடுக்கப்பட்டதாலும் ராமசாமிக்கு இப்பொறுப்பு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. திமுகவோடு இணைந்து எதிர்கட்சிகள் என்கிற ரீதியில் சட்டமன்றத்தில் சிறப்பாக பணியாற்றுவோம் என இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
No comments:
Write comments