இலங்கையில் வாழும் தமிழர்கள் தாங்கள் இழந்த சொத்துக்கள், நிலங்களை அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் ஜி7 நாடுகளின் மாநாடு ஷிமோ நகரில் மே 26 மற்றும் 27 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இலங்கை அதிபருக்கும் இந்த மாநாட்டில் பங்கெடுக்க அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் ஜப்பான் சென்றார். அங்கு இலங்கை மக்கள் சார்பில் சிறிசேனாவுக்கு மிகுந்த உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்மாநாட்டில் கலந்து கொண்டு அதிபர் கூறியதாவது "இலங்கை தமிழர்கள் தங்களது சொந்த நிலங்களை இழந்துள்ளனர். அவர்கள் அதனை திரும்பப்பெருவதற்காக 27 ஆண்டுகளாக முயற்சித்தும் எந்த பலனும் இல்லை, இன்னும் அவர்கள் அதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சொத்துக்கள் அவர்களுக்கானது, எனவே அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவரவர்களின் நிலங்கள் அவர்களிடமே வெகுவிரைவில் திரும்ப ஒப்படைக்கப்படும் என அவர் கூறினார்.
விடுதலை புலிகளுடனான போரின் போது கடந்த காலங்களில் இலங்கை தமிழர்களின் சொத்துக்கள் நிலங்கள் என அனைத்தும் இராணுவத்தினரால் அபகறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments