Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 18, 2016

தனியார் பேருந்துகளில் புதுப்படம் - நடிகர் சங்கம் நடவடிக்கை

நடிகர் நாசர் தலைமையிலான நிர்வாகிகள் சங்க பொறுப்பேற்ற பிறகு நடிகர் சங்கம் பல்வேறு பிரச்சனைகளில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.




குறிப்பாக திருட்டு டிவிடிக்கு எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
தனியார் பேருந்துகளில் புதுப்படங்கள் திரையிடுவது தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. அதற்கு எதிராக கடும் நடவடிக்கையில் நடிகர் சங்கம் இறங்கியுள்ளது. தெறி படத்தை திரையிட்ட தனியார் பேருந்தை மடக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
மனிதன் படத்தை தனியார் பேருந்து ஒன்றில் திரையிடுவதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் நடிகர் ஸ்ரீமன் தலைமையில் சிலர் அப்பேருந்தை சென்னை மதுரவாயல் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். பிறகு மதுரவாயல் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கும் போடப்பட்டது.
மே 20ல் வெளியாகும் தனது மருது படத்தின் திருட்டு டிவிடி வெளியானால், பார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லை, கடும் நடவடிக்கையில் இறங்குவேன் என்று விஷால் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அப்டியே தியேட்டர் கட்டணத்தையும் குறைத்தால் தியேட்டரில் போய் படம் பார்பவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic