Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 18, 2016

ராதாரவி அண்ணன் வந்தார் என்னைக் கட்டிப் பிடித்தார் : விஷால்...!!!

டிகர் சங்க விவகாரத்தில் நேருக்குநேர் மோதிக் கொண்டவர்கள் ராதாரவியும், விஷாலும்.


ராதாரவி எந்த பதவிக்கு போட்டியிடுவாரோ, அதே பதவிக்கு அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறி, அவரை எதிர்த்து தேர்தலில் நின்று சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆனவர் விஷால். இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடித்திருப்பது திரையுலகுக்கு மட்டுமில்லை ரசிகர்களுக்கும் ஆச்சரியம் கலந்த அதிசயம்.





மருது படத்தின் பிரஸ்மீட்டில் அந்த முதல் நாள் சந்திப்பை விஷால் விளக்கினார்.
"முத்தையா என்னிடம் கதை சொன்ன போது, குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு ராதாரவி அண்ணன் நடித்தால் நன்றாக இருக்கும், உங்களுக்கு எப்படின்னு தயங்கி கேட்டார். இதை கேட்க என்ன தயக்கம்? எந்த கதாபாத்திரத்துக்கு யார் பொருத்தமோ அவர்களை நடிக்க வைங்க. இதுவரை நாங்க சேர்ந்து நடிச்சதில்லைன்னு சொன்னேன்.
நடிகர் சங்க தேர்தலில் அவர் ஒரு கோணத்தில் நின்றார். நான் வேறொரு கோணத்தில் நின்றேன். 
அவ்வளவுதான். சங்கம் வேறு நடிப்பு வேறு. சங்கம் வேறு தொழில்வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. ராதாரவி அண்ணன் வந்தார் என்னைக் கட்டிப் பிடித்தார். 'இப்போது தொடர்ச்சியாக நிறைய படங்கள் நடிக்கிறேன். வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நடிகர் சங்கத்துக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் சொல்லுப்பா செய்றேன்' என்றார். அவர் ஒரு மூத்த நடிகர். அவர் மரியாதைக்குரியவர் என்பதை என்றும் நான் மறந்ததில்லை" என்றார் விஷால்.
சரத்குமார் தலைமையிலான சங்க நிர்வாகிகளை எதிர்த்து போட்டியிட்டால் சங்கம் உடையும், பொறாமை வளரும், இருதரப்பும் சேர்ந்து நடிக்க மாட்டார்கள் என்று சேரன், செல்வமணி போன்றவர்கள் நேரடியாகவே தங்கள் கருத்தை பதிவு செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic