மத்திய ரிசர்வ் வங்கி மக்களின் நலன் கருதி சுயமுடிவெடுப்பதற்கு அதிகாரம் வழங்கப்படவேண்டுமென மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் ரகுராம் ராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் ஊழியர்களுக்காக நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கெடுத்த ரகுராம் ராஜன் கூறியதாவது, மத்திய ரிசர்வ் வங்கியால் எடுக்கப்படும் முடிவுகள் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடையதாகும். இந்திய நாட்டின் நாடித்துடிபே விவசாயமாகும். அதனை ஊக்குவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி பல நல்ல முடிவுகளை எடுக்கவேண்டியுள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கிக்கு சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு முடிவுக்கும் மத்திய அரசின் ஒப்புதலோடு செய்வது காலதாமதத்தை ஏற்படுத்தும்.
இந்திய பொருளாதாரம் சர்வதேச பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது நமது பொருளாதாரம் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச வருடங்களில் ஒரு நல்ல நிலையை எட்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அதே சமயம் பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, ரகுராம் ராஜனை ஆளுனர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும், அவர் மனதளவில் இந்தியராக செயல்படுவதில்லை என குற்றஞ்சாட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கிக்கு சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் வேண்டுமென ரகுராம் ராஜன் கூறியிருப்பது பெரும் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Write comments