பீரஹாரில் நிதிஷ்குமார்-லல்லு கட்சிகளின் மெகா கூட்டணி வெற்றிபெற்றதை தொடர்ந்து அம்மாநிலத்தில் அதிரடியாகவும் அசத்தலாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
நிதிஷ்குமார் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போல, ஆட்சி அமைத்த சில மாதங்களில் பூரண மதுவிலக்கை அமலுக்கு கொண்டுவந்தார். மதுவிலக்கை கொண்டுவருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று சொன்னபிறகும் அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை, எங்களுக்கு மக்களின் நலனே முக்கியம் என்கிற ரீதியில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது.
அதிலிருந்து மதுக்கடைகள் நடத்துவதற்கும், மது குடிப்பதற்கும், அதை பதுக்கி வைப்பதற்கும் தடை என்ற நிலை பீஹாரில் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இப்போது பான் மசாலா, குட்கா போன்ற போதை வஸ்துக்களுக்கும் அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது. இன்று முதல் எல்லா போதை வஸ்துக்களும் தடை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மிகவும் பின் தங்கிய மாநிலமாக கருத்தப்படும் பீஹார் தற்போது முன்மாதிரி மாநிலமாக மாறிவருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பேசாம நாம பீஹாருக்கு குடிபெயர்ந்துடலாம் போல...

No comments:
Write comments