திருவனந்தபுரம்: நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவை தேர்தலில் 92 இடங்களில் வெற்றி பெற்ற இடதுசாரி முன்னனி வருகின்ற 25ஆம் தேதி புதன்கிழமை பதவி ஏற்புவிழா நடைபெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற அதே தினத்தில் கேரள மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையும் அதே போன்று ஒரே தேதியில் (19 மே) நடைபெற்றது. இதில் ஐக்கிய முன்னனியின் காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களை மட்டுமே பெற்று தோழ்வி அடைந்தது. இடது சாரி முன்னனியான கம்யூனிஸ்ட் கட்சி 92 இடங்களை பெற்று ஆட்சியை பிடித்தது.
இதனை அடுத்து நேற்றைய முன் தினம் கேரள முதல்வர் உம்மண்சாண்டி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொண்டு ஆளுனர் சதாசிவத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை நேரடியாக சென்று சமர்பித்தார். இதனை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியை ஆட்சி அமைக்கவருமாறு ஆளுனர் அழைத்தார். 2006 சட்டமன்ற தேர்தலின் வெற்றியின் போது அச்சுதாணந்தன் முதல்வராக பதவி ஏற்றார். அதே போன்று இம்முறையும் முதலமைச்சராக அவரே பதவி ஏற்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வருகிற 25ஆம் தேதி புதன்கிழமை அன்று பினராயி விஜயன் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ளார். இதற்கான விழா ஏற்பாடுகள் திருவனந்தபுரத்தில் நடைபெற்றுவருகின்றன.

No comments:
Write comments