ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி 9 விக்கெட் மற்றும் 8 விக்கெட் வித்தியாசங்களில் சுலபமாக வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றிவிட்டது. இந்த நிலையில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அதே ஹராரே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரெமர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய ஜிம்பாப்வே அணி மந்தமாக ஆடியது மட்டுமில்லாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்த வண்ணம் இருந்தது. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக ஜிபாந்தா 38 ரன்கள் எடுத்தார். 42.2 ஓவர்கள் முடிவில் 123 ரன்கள் எடுத்த நிலையில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி. ஜிம்பாப்வே நிர்ணயம் செய்த இலக்கை எளிதாக எட்டியது.
இந்திய அணி 21.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 126 ரன்கள் எடுத்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று போட்டித்தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணியில் லோகேஷ் ராகுல் 70 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். பாசல் 61 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்.
இதில் பாசல் தனது முதல் போட்டியிலேயே அரை சதத்தை விளாசி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments