நடிகர் ரஜினிகாந்த், கபாலி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததால் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருகிறார். அப்படியே, ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் 2.0 படத்திற்காகவும் அவ்வப்போது மேக்கப் சம்பந்தமாக அடிக்கடி மருத்துவமனைக்கும் சென்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களூக்கு முன்பு கபாலி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. ரஜினி இல்லாமல் இவ்விழா நடைபெற்றதாலும், அமெரிக்க பயணத்தை ஒருவாரம் அதிகப்படுத்தியிருப்பதாலும் இன்று காலையில் ரஜினியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இது குறித்து 2.0 படத்தின் தயாரிப்பு நிர்வாகி ராஜூ மகாலிங்கம், 2.0 படத்தின் மேக்கப் சம்பந்தமாகத்தான் ரஜினிகாந்த் மருத்துவனைக்கு சென்றார் என்று கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓ. ரியாஸ், ‘’ரஜினி சார் தற்போது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் இருக்கிறார். இங்கே பரவும் வதந்தி குறித்து தகவல் தெரிவித்திருக்கிறேன். அமெரிக்காவில் இப்போது இரவு நேரம் ஆகும். காலையில் எழுந்ததும் ரஜினி சாரே டுவிட்டரில் இது குறித்து பதிவு செய்ய உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்’’ என்று கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் பற்றிய செய்திகளை நம்பவேண்டாம் என்று ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் குடும்பத்தினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments