குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகும் அவருடைய இதயம் அடுத்த 30 நிமிடங்களுக்கு துடித்ததாக அவருடைய மகள் ஹனா பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார். குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அமெரிக்காவைச் சேர்ந்த முகமது அலி,74 நேற்று முன்தினம் காலமானார். உலகம் முழுவதும் உள்ள குத்துச்சண்டை ரசிகர்கள் இந்த தகவலை அறிந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முகமது அலி கடந்த 34 ஆண்டுகளாக பார்க்கின்சன் என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பார்க்கின்சன் என்பது மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அதன்மூலம் மனிதனின் இயக்கத்தை முடக்கக்கூடிய ஒருவித வாத நோயாகும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுவாச கோளாறு ஏற்படவே, முகமது அலி பீனிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூன்று முறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜாம்பவானான முகமது அலியின் மறைவு குத்துச்சண்டை உலகை அதிர்ச்சியில் உறைய வைத்து இருக்கிறது.
பொதுமக்கள் அஞ்சலி:
முகமது அலியின் உடல், அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லே நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதிச்சடங்கு:
மகள் உருக்கம்:
முகமது அலி மரணத்தின் போது என்ன நேர்ந்தது என்று அவரது மகள்களில் ஒருவரான ஹனா அலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பாவின் கடைசி தருணத்தில் நாங்கள் அனைவரும் அருகில் இருந்தோம். அவரை கட்டியணைத்த படியும், முத்தமிட்டபடியும், கைகளை பற்றிக் கொண்டும் இருந்தோம்.
துடித்த இதயம்:
செய்தி :: சாஹிப்...





No comments:
Write comments