மோசமான வானிலை காரணமாக சென்னை வந்த 3 விமானங்கள் பெங்களூரு திருப்பிவிடப்பட்டன.
சென்னையில் நேற்று இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் தெளிவற்ற வானிலையுடன் காணப்பட்டதால் சென்னை விமான நிலையம் நோக்கி வந்த மூன்று விமானங்கள் பெங்களூருவிற்கு திருப்பிவிடப்பட்டன. மழை காரணமாக டெல்லி, கோலாலம்பூர் மற்றும் பிராங்பேர்ட்டில் இருந்து சென்னை வந்த விமானங்கள் பெங்களூரு திருப்பிவிடப்பட்டது என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சில மணிநேரங்கள் கழித்து வானிலை சீரானதை தொடர்ந்து விமானங்கள் சென்னையில் தரையிறக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments