‘தெறி’ படத்திற்குப் பிறகு விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களிலும் நெல்லை தமிழ் பேசுபவராக நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘விஜய் 60’ என்று அழைத்து வருகிறார்கள்.
தற்போது படத்திற்கான தலைப்பை தேர்வு செய்வதில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தின் தலைப்பை விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி அறிவிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அன்று வெளியிட இருக்கின்றனர்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் சதீஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை விஜயா புரொடக் ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments