அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று காலை தில்லியில் இருந்து ஆப்கானிஸ்தான் புறப்பட்டு சென்றார்.
பிரதமர் மோடி ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய 5 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை தில்லியில் இருந்து புறப்பட்ட அவர் முதலில் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு செல்கிறார். அதன்பிறகு அங்கிருந்து கத்தார் செல்லும் மோடி, நாளை சுவிட்சர்லாந்து செல்கிறார்.
பின்னர் அங்கிருந்து திங்கட்கிழமை அமெரிக்கா செல்கிறார். அங்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுவதுடன், 8–ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துகிறார்.
அதன்பிறகு அன்றே அங்கிருந்து மெக்சிகோ செல்கிறார். இறுதியாக மெக்சிகோ சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அன்று மாலை அங்கிருந்து இந்தியா புறப்படுகிறார். மோடியின் இந்த பயணம் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments