தமிழக சட்டசபையில் மூன்றாவது நாளாக இன்றும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்கட்சி தலைவர் திமுக பொருளாளர் ஸ்டாட்லி பல்வேறு பிரச்சனைகளை குறித்து கேள்வி எழுப்பினார். விஷன் 2025 குறித்து சில புகார்களை தெரிவித்தார். இதற்கு அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பதில் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே மக்கள் பிரச்சனை குறித்து பேச திமுக உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு திமுக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறும்போது "தேர்தலில் போது பிடிபட்ட 570 கோடி ரூபாய் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கோரிக்கை வைத்தோம். அதிமுக நிர்வாகி அன்புநாதன் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கோரினோம். ஆனால் திமுக உறுப்பினர்கள் பேசும்போது அவர்களை பேசவிடாது அதிமுகவினர் குறிக்கிட்டனர். மக்கள் பிரச்சனையை பேசுவதற்கு அனுமதி அளிக்காததால் வெளி நடப்பு செய்தோம்" என ஸ்டாலின் தெரிவித்தார்.
No comments:
Write comments