Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 22, 2016

சீனாவில் நாய்க்கறி திருவிழா



சீனாவின் வருடாந்தர நாய் கறி திருவிழா யூலின் பகுதியில் கோலாகலமாக தொடங்கியது. யூலின் பகுதியில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த விழாவில் இந்த முறை 10,000 நாய்கள் வரை உணவாக்கப்படும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவிற்காக ஏராளமான நாய்களை இங்கு கொண்டுவந்து சமைத்து உண்பதை சீன மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால் இந்த விழாவிற்கு உலகெங்கிலும் உள்ள மிருகவதை எதிர்ப்பாளர்களிடம் இருந்து கடும் கண்டங்களும் போராட்டங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இந்த விழாவினை தடை செய்ய வேண்டி 25 லட்சம் பேர் கெயெழுத்திட்டு மனுவை உள்ளூர் அரசு நிர்வாகத்திடம் அளித்துள்ளனர். ஆனால் இந்த விழாவானது தனியாரால் நடத்தப்படுவதால் தங்களுக்கு அதில் எதுவும் செய்வதற்கில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சீனாவில் நடைபெற்று வரும் இந்த நாய் இறைச்சி விழாவானது கடந்த 500 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதன் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். வாட்டும் கோடையில் வெப்பத்தை தணிப்பதற்காக நாய் இறைச்சியை காலங்காலமாக சீனா மற்றும் இதர ஆசிய நாடுகளிலும் உண்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த விழாவிற்கு எடுத்துவரப்படும் நாய்களை மனிதாபிமானமற்ற முறையில் கூண்டுகளில் அடைத்து விழா நடக்கும் பகுதிக்கு எடுத்து வருவதாகவும், தெருவில் வைத்தே அவைகளை கொன்று சமைக்கப்படுவதாகவும், அல்லது உயிருடன் அவைகளை நெருப்பில் வாட்டி எடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர் மிருக வதை எதிர்ப்பாளர்கள்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic