சட்டப்பேரவையில் திமுக தலைவர் கருணாநிதியின் வயதை மு.க. ஸ்டாலின் தவறுதலாக குறிப்பிட்டதால் முதல்வர் ஜெயலலிதா சிரித்து விட்டார். பின்னர், சுதாரித்துக் கொண்ட மு.க.ஸ்டாலின், தந்தையின் வயதை சரியாக குறிப்பட்டு அவைக்குறிப்பில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நேற்று 93வது பிறந்த தினமாகும். தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர், துணை சபாநாயகர் பதவி ஏற்பு நிகழ்ச்சியும் நேற்று நிகழ்ந்தது. சபாநாயகரை இருக்கையில் அமரச்செய்யும் வாய்ப்பு, கருணாநிதியின் மகனும், சட்டமன்ற தி.மு.க. கட்சியின் தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு அதே நாளில் அமைந்தது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட மு.க. ஸ்டாலின், தனது தந்தையும் கட்சித் தலைவருமான கருணாநிதியின் பிறந்த தினம் இது என்ற தகவலை சட்டப்பேரவை பதிவுகளில் பதியச்செய்தார். அப்போது பேசிய ஸ்டாலின், 93 என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, கருணாநிதியின் 63வது பிறந்த தினம் என்று மாற்றிக்குறிப்பிட்டார். நேர் எதிரில் இருந்து அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதியின் வயதைக் கேட்டதும் பலமாகச் சிரித்தார்.
பேச்சை முடித்துவிட்டு உட்கார்ந்த மு.க. ஸ்டாலினிடம் இதுபற்றி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூறினர். உடனே ஸ்டாலின் மீண்டும் எழுந்து, சபாநாயகரின் அனுமதியைப்பெற்று, தான் குறிப்பிட்டிருந்த கருணாநிதியின் வயதை மாற்றி அதை 93 என்று பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments