Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 4, 2016

ஜப்பானின் உயரிய விருதை பெறுகிறார் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான்...!


இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தன்னிகரில்லா சாதனையை பாராட்டி ஜப்பானின் உயரிய விருதான ஃபுகுவோகா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கலாச்சாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் ஜப்பானின் ஃபுகுவோகா நகரின் பெயரில் யகாடோபியா அறக்கட்டளையுடன் இணைந்து ஆண்டு தோறும் ஃபுகுவோகா (Fukuoka Prize) விருது வழங்கப்பட்டு வருகிறது. Grand, Academic, மற்றும் Arts and Culture என மூன்று பிரிவுகளாக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டிற்கான Grand Prize இந்தியாவின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றிய தன்னிகரில்லா இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மானுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, உலகின் உயரிய திரைத்துறை விருதான 'ஆஸ்கர்', இசையுலகின் சிகரமாக கருதப்படும் 'கிராமி', 'ஃபாப்டா', 'கோல்டன் குளோப்' என உலகின் அத்தனை உச்ச விருதுகளையும் தனது கிரீடத்தில் பதித்துள்ள ரஹ்மானுக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Academic விருது பிலிப்பைன்ஸ் நாட்டின் வரலாற்று அறிஞரும், பத்திரிகையாளருமான அம்பெத் ஆர்.ஒகாம்போவுக்கும், பாகிஸ்தானின் சிற்பக்கலை வல்லுநரும், கட்டட பொறியாளருமான யாஸ்மீன் லாரிக்கு Arts and Culture அறிவிக்கப்பட்டுள்ளது.


1989ம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் ஃபுகுவோகா விருது வழங்கப்பட்டு வருகிறது. Grand Prize விருது பெறும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

இசையமைப்பாளர் ரவிசங்கர் சவுத்ரி, அஜ்மத் அலி கான், பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியன், வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், ராமசந்திர குஹா ஆகிய 9 பேருடன் தற்போது 10வதாக ஏ.ஆர்.ரஹ்மானும் ஃபுகுவோகா விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி :: சாஹிப்...

வீடியோவை காண:


No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic