தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் 20 அரசு கல்லூரிகள் மற்றும் 6 சுயநிதி மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு 2 ஆயிரத்து 650 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம் போக, 2 ஆயிரத்து 253 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு உள்ளன.
6 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 760 இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 290. அரசு ஒதுக்கீட்டுக்கு 470 இடங்கள் உள்ளன. மேலும் 2 இ.எஸ்.ஐ.கல்லூரிகளில் படிக்க 200 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 70 ஆகும். அந்த இடங்கள் தவிர அரசு ஒதுக்கீட்டாக 130 இடங்கள் உள்ளன. ஆக, 28 கல்லூரிகளில் 3 ஆயிரத்து 610 இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டாக மொத்தம் 757 இடங்கள் இருக்கின்றன. தமிழக ஒதுக்கீட்டாக 2 ஆயிரத்து 853 இடங்கள் இருக்கின்றன. அரசு பல் மருத்துவக்கல்லூரி ஒன்று உள்ளது. அதில் 100 இடங்கள். அகில இந்திய ஒதுக்கீடு 15 போக, மீதம் உள்ள 85 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு வந்துள்ளது. சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகள் 17 உள்ளன. அந்த கல்லூரிகளில் மொத்தம் 1,610 பல் மருத்துவ இடங்கள் உள்ளன. அவற்றில் அகில இந்திய மருத்துவ இடங்கள் 640.மீதம் உள்ள இடங்கள் 970. இந்த இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு வந்துள்ளன. மருத்துவக் கல்லூரி தரவரிசைப் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. முதல் கட்ட கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது. இன்று விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் முதலிய ஒதுக்கீட்டுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் கலந்தாய்வு தொடங்குகிறது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments