ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியா சார்பில் புணரமைக்கப்பட்டுள்ள `நட்புறவு அணையை' பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார்.
ஐந்து நாடுகளுக்கு இன்று அரசு முறை பயணத்தைத் தொடங்கியுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலாவதாக, ஆப்கானிஸ்தான் சென்றடைந்தார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராட் மாகாணத்தில் உள்ள சல்மா அணையை இந்திய அரசு ரூ. 1700 கோடி மதிப்பில் புணரமைப்பு செய்துள்ளது. ஈரான் நாட்டு எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த அணை மூலம் 75000 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். மேலும், அணையிலிருந்து 42 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும். இந்த அணைக்கு தற்போது 'நட்புறவு அணை' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அணையை பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனியுடன் இணைந்து தொடக்கிவைத்தார்.
அணை தொடக்கவிழாவில்பேசிய அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனி, இந்திய பிரதமர் மோடிக்கு ஆப்கானிஸ்தான் இரண்டாவது தாய்வீடு என்றார். இந்த அணை இந்தியா ஆப்கானிஸ்தான் இடையேயான நட்புறவுக்கும் வளர்ச்சிக்கும் அடையாளமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விழாவில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த அணை மூலம் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு இங்குள்ள இல்லங்களும வெளிச்சம் பெறும். மேலும், இந்த அணை ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் அதிகரிக்கும் என்றார்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments