Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 4, 2016

ஒலிம்பிக் மற்றும் தெற்காசிய போட்டிக்கு தமிழக மாணவர்கள் தகுதி

அமெரிக்கா, துபாய் மற்றும் டில்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் வென்று தமிழக மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். பிரேசிலில் இந்த ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள தமிழக மாணவர் தேர்வாகி உள்ளார்.

2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள 'சர்வதேச பார் ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள்' துபாயில் நடைபெற்றன. 'ஆசியா ஒசானியா சாம்பியன்ஷிப்' என்ற பெயரில் நடந்த போட்டியில், 63 நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் தமிழக மாணவர் மனோஜ் கலந்து கொண்டு, 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம், 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் பிரேசிலில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள இவர் தகுதி பெற்றுள்ளார்.

சென்னையிலுள்ள எஸ்.எஸ். ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. டில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான குமிட்டி' என்னும் கராத்தே சண்டை பிரிவில் கணேஷ் மற்றும் அஷ்வினி தங்கப் பதக்கங்களை வென்றனர். இலங்கையில் நடைபெறவுள்ள தெற்காசிய கராத்தே சாம்பியன்களுக்கான போட்டியில் இந்தியா சார்பில் பங்கு பெற இவர்கள் தகுதி பெற்றுள்ளனர். பயிற்சியாளர் கியோஷி சேகர் இருவருக்கும் பயிற்சியளித்து வருகிறார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மாணவர் அரவிந்த பாபு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 40 நாடுகள் கலந்து கொண்ட ஜுனியர் பிரிவில் அரவிந்தபாபு இப்பதக்கம் பெற்றார். தமிழகத்தைச் சேர்ந்த யாமினி மற்றும் ஸ்ரீவர்ஷா ஆகியோரும் இதே போட்டியில் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic