பிரபல மத போதகர் ஜாகிர் நாயக்கின் நடத்திவரும் அறக்கட்டளை சட்டட்திற்கு புறம்பானது என்றும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர் பேசினார் என குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மத்திய உள்துறை அமைச்சகம் டாக்டர் ஜாகிர் நாயக் மீது யு.ஏ.பி.ஏ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்போவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. பிரபல மத போதகரான ஜாக்கிர் நாயக்கின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு பல பயங்கரவாதிகள் தீவிரிவாத தாக்குதலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த மாதம் ஜூலையில் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டவன் என கண்டுபிடிக்கப்பட்டது. தாக்குதல் நடைபெற்ற தினத்தில் ஜாகிர் நாயக் இந்தியாவில் இல்லை.
தனது பேச்சுக்கள் மூலம் வன்முறையை தூண்டிவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவரது அறக்கட்டளையும் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தடை உத்தரவிடப்பட்டதும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இயங்கி வரும் ஐ.ஆர்.எஃப் தொடர்புடைய அனைத்து அமைப்புக்களும் தடை செய்யப்படும் என தெரிவித்தார்.
கடந்த மாதம் டாக்கா தாக்குதலுக்கு பிறகு வங்கதேச அரசு ஜாகிர் நாயக் நடத்தி வரும் பீஸ் தொலைக்காட்சிக்கு தடைவிதித்தது. இதற்கான முடிவை அந்நாட்டு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அமலாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வங்கதேச அரசின் அமைச்சர் ஆமீர் ஹுசைன் கூறியதாவது "வெள்ளிக்கிழமைகளில் மசூதிகளில் நடக்கும் பிரசங்கங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தீவிரவாதத்திற்கு எதிராகவும் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராகவும் பிரசங்கம் செய்யுமாறு மத போதகர்களை வலியுறுத்தியுள்ளோம்." என தெரிவித்தார்.
ஜாகிர் நாயக் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு மும்பை காவல்துறையினருகு மகாராஷ்டிரா அரசு கட்டளையிட்டது. வங்கதேசத்தில் பீஸ் தொலக்காட்சிக்கு தடைவிதித்த பின்னர் ஜாகிர் நாயக் தான் ஒரு போதும் தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசியதில்லை என தெரிவித்திருந்தார். மேலும் எந்த ஒரு அரசு அதிகாரியும் தன்னை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என கூறியிருந்தார். ஊடகங்கள் தன் மீது அவதூறு பிரச்சாரத்தை செய்வதாகவும், இதனை எதிர்த்து தான் வழக்கு தொடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments