Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 29, 2016

மோடியை குற்றஞ்சாட்டும் ஹர்திக் படேல்!


கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் படேல் சமூகத்து இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டுமென ஹர்திக் படேல் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

படேல் சமூகத்திற்கு அரசு வேலை வாய்ப்புகளில் தனிப்பட்ட இடஒதுக்கீடு கோரி படேல் சமூக மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர் ஹர்திக் படேல். இவரை கைது செய்து சிறையில் அடைத்தது குஜராத் அரசு. பின்னர் நிபந்தனையின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்ட ஹர்திக் படேல் 6 மாதத்திற்கு குஜராத் மாநிலத்தில் இருக்க கூடாது என நிபந்தனையின் அடிப்படையிலேயே ஜாமீனில் வெளியே விடப்பட்டார்.

இந்நிலையில் உதைப்பூரில் தங்கியிருகும் ஹர்திக் படேல் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தின் போது தனது படேல் சமூக இளைஞர்கள் 102 பேர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு பிறகு அதனை தனக்கு சாதகமாக்கி குஜராத் முதல்வராக இரண்டாவது முறையாக மோடி பதவி ஏற்றது அனைவருக்கும் தெரியும். பின்னர் நாட்டின் பிதமர் பதவியை அடையும் அளவிற்கு உயர்ந்துவிட்டார்" என ஹர்திக் படேல் தெரிவித்திருக்கிறார்.

குஜராத் படுகொலைக்கு நரேந்திர மோடியே காரணம் என அவர் மீது குற்றஞ்சாட்டிய ஹர்தீக் பட்டேல், படேல் சமூகத்தின் இளைஞர்களை கலவரத்திற்கு மோடி நன்கு பயன்படுத்திவிட்டார் என தெரிவித்திருக்கிறார். இப்போது மோடி பிரதமராக இருக்கிறார். ஜனாதிபதியுடன் பேசி சிறையில் இருக்கும் என் சமூகத்து இளைஞர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் இதனை மோடி செய்ய மாட்டார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். காரணம்  தற்போது மோடி தன்னை உலக அரங்கில் மதசார்பற்ற தலைவராக காட்டி வருகிறார்" இவ்வாறு ஹர்திக் படேல் கூறியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic