Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 29, 2016

வன்முறையை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை! - கஷ்மீர் முதல்வர்


வன்முறையை கைவிட்டு அமைதியை விரும்பினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த ஒத்துக்கொள்ளப்படும் என கஷ்மீர் முதல் மெஹ்பூபா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த மெஹ்பூபா கூறியதாவது "கஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமென அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். அரசுக்கும் அதே எண்ணம்தான். ஆனால் வன்முறையை கைவிடாதவரை கஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த முடியாது. பேச்சுவார்த்தை மூலம் கஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என எல்லோரும் கருத்து கூறுகிறார்கள். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு தயாராகவே உள்ளது. வன்முறை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்கப்படுவர்" என மெஹ்பூபா தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை கஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த மெஹ்பூபா நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அதில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கஷ்மீர் விவகாரம் நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டது போல மோடியும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic