அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை பல மணி நேரம் நிறுத்தி வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷாருக்கான், அதிகாரிகளின் இந்த செயல்பாடுகள் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டது குறித்து டுவிட்டரில் ஷாருக்கான் கூறுகையில், உலகம் முழுவதிலும் இருக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை நான் முழுமையாக புரிந்து கொள்கிறேன். அவற்றை மதிக்கிறேன். ஆனால், அமெரிக்கா செல்லும் ஒவ்வொரு முறையும் விசாரணை என்ற பெயரில் அதிகாரிகள் நடந்தும் கொள்ளும் முறை வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பதிவிட்டுள்ள மற்றொரு டுவிட்டில், இதில் மற்றொரு நல்ல விஷயம் காத்திருந்த நேரத்தில் சில அருமையான போகிமோன் படங்களை எடுத்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஷாருக்கான் அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக பிடித்து வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் 2009 ம் ஆண்டு நியூஜெர்சி விமான நிலையத்திலும், 2012ல் நியூயார்க் விமான நிலையத்திலும் சோதனை மற்றும் விசாரணை என்ற பெயரில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பிடித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விசாரணையின் போது ஷாருக்கான் யாரிடமும் போனில் பேசக் கூட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

No comments:
Write comments