சேலத்திலிருந்து சென்னை கொண்டு வரப்பட்டு பணம் இரயில் சென்னை வந்தபின்னரே கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் புழக்கத்தில் இருந்த பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு அதனை சேலம் விரைவு இரயிலில் தனி சரக்குப் பெட்டியில் ஏற்றப்பட்டு கடந்த 8-ம் தேதி சேலத்திலிருந்து புறப்பட்டு 9-ம் தேதி அதிகாலையில் எழும்பூர் ரயில் நிலையம் வந்தது. பின்னர், பணம் இருந்த சரக்கு பெட்டி மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு எழும்பூரில் உள்ள பார்சல் சர்வீஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டது.
சென்னை ரிசர்வ் வங்கியின் உதவி மேலாளர் நடராஜன் ரயில் பெட்டியின் சீலிடப்பட்ட பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிடப்பட்டு ரூ.5 கோடியே 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த வழக்கு தமிழக சிபிசிஐடி வசம் நேற்று முன்தினம் இரவு ஒப்படைக்கப்பட்டது. நேற்று காலையில் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி கரன்சின்கா எழும்பூர் இரயில் நிலையத்துக்கு வந்தார். அங்கு கொள்ளை நடந்த இரயில் பெட்டியை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கிருந்து சேத்துப் பட்டில் பணியில் இருந்த பணிமனை ஊழியர்களிடமும் கொள்ளை எப்படி நடந்திருக்கும் எனக்கேட்டார். அதற்கு பதில் அளித்த ஊழியர்கள், “ரயில் பெட்டியை பற்றி நன்றாக தெரிந்தவர்களால் மட்டுமே இப்படி செய்ய முடியும்” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து இரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், இரயில்வே போலீஸார் இதுவரை சேகரித்து வைத்திருந்த அனைத்து தகவல்களையும் கரன்சின்கா பெற்றுக் கொண்டார். முதல் கட்டமாக இரயில் பாதுகாப்பு பணிக்காக சென்ற ஆயுதப் பிரிவு உதவி கமிஷனர் நாகராஜன் உள்ளிட்ட 9 பேரின் பெயர், முகவரி, செல்போன் எண் அடங்கிய பட்டியலை பெற்றுக் கொண்டார்.
பணம் கொண்டு வரப்பட்ட இரயில் சேலத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் நுழையும்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பணம் வைக்கப்பட்டிருந்த இரயில் பெட்டியின் மேற்கூரையில் துளை எதுவும் இல்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனவே சரக்கு இரயில் சென்னைக்கு கொண்டு வரப்பபட்ட பிறகே இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் இது கு றித்து கூறியதாவது, இரயில் கொள்ளை குறித்து முதலில் விசாரணையை தொடங்கியது இரயில்வே பாதுகாப்பு படையினர்தான். அவர்கள் முழுக்க முழுக்க இரயிலில் பாதுகாப்பு பணியை மட்டுமே செய்வார்கள். எனவே அவர்களிடம் புலனறியும் தன்மை அவ்வளவாக இருக்காது.
இதனால், இந்த வழக்கு அவர்களிடம் இருந்து எழும்பூர் இரயில்வே போலீஸாருக்கு மாற்றப்பட்டது. 2 மாதங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற ஐ.டி பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கையும் அவர்கள்தான் முதலில் விசாரித்தார்கள். ஆனால், அவர்களால் துரிதமாக செயல்பட முடியவில்லை. காரணம் பாதுகாப்புபணி உள்ளிட்ட பல்வேறு இதர பணிகள் அவர்களுக்கு இருந்தது. மேலும், செல்போன் பேச்சுகளை ஒட்டுக்கேட்கும் கருவி உள்ளிட்ட முக்கியமான கருவிகள் அவர்களிடம் இல்லை. எனவே, இந்த கொள்ளை வழக்கை இரயில்வே போலீஸார் விசாரித்தால் கொள்ளையர்களை விரைவாக நெருங்க முடியாது என நினைத்த டிஜிபி அசோக்குமார் உடனடியாக நேற்று முன்தினம் இரவோடு இரவாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
சிபிசிஐடி போலீஸாருக்கு பாதுகாப்பு பணி போன்ற எந்த பணியும் கிடையாது. அவர்களிடம் சிறப்பாக புலன் விசாரணை செய்யக் கூடிய அதிகாரிகளும் உள்ளனர். மேலும் சைபர் கிரைம் பிரிவும் தனியாக உள்ளதால் தான் வழக்கு உடனடியாக மாற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments