உலகில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உருவானதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமேவே காரணம் என அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேலையில் தற்போது அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத்துவங்கியுள்ளது. நம்மூரைப்போலவே அங்கும் எதிர்கட்சி வேட்பாளர்களை சரமாரியாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் சர்ச்சைக்கு பெயர் போனவர். தற்போது அவர் கூறியிருக்கும் கருத்து மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடாவில் போர்ட் லவ்டர்டேலில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் டிரம்ப். அங்கு அவர் பேசியதாவது, தற்போது மத்திய கிழக்கு நாடுகள் முதல் ஐரோப்பிய நாடுகள் வரை ஐ.எஸ் பயங்கரவாதம் வளர்ந்திருப்பதற்கு காரணமே நமது ஜனாதிபதி ஒபாமா தான் என்று பேசினார். இதற்கு முன்னர் ஹிலாரி கிளிண்டன் தான் ஐ.எஸ் அமைப்பை உருவாக்கினார் என்றும் பேசியிருக்கிறார் டிரம்ப்.
ஈராக்கிலிருந்து அமெரிக்க படையை திரும்ப பெறுவோம் என ஒபாமா கூறியிருப்பது ஐ.எஸ் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பது போன்றதே என டிரம்ப் விமர்சித்துள்ளார். எனினும் இந்த விமர்சனம் குறித்து அதிபர் மாளிகையிலிருந்து எவ்வித பதிலையும் வரவில்லை. அதே சமயம் இதற்கு முன்னர் டிரம்ப் தம் வார்த்தைகளை சரியாக பயன்படுத்த வேண்டுமென ஹிலாரி கிளிண்டன் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments