Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 27, 2016

கோயிலில் வழிபட்ட வெள்ளி மங்கை பி.வி சிந்து!



ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர், பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. இவர் சமீபத்தில், விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் தெய்வ பக்தி கொண்ட சிந்து, ஹைதராபாத்தில் உள்ள சிம்மவாஹினி மகாகாளி கோயிலில் வழிபட்டார். பாவாடை தாவணி உடையணிந்து வந்த சிந்து, பயபக்தியுடன் வேண்டுதல் பொருள்களைத் தலையில் வைத்து சுமந்து சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடைய பெற்றோரும் உடன் வந்தார்கள். சிந்துவின் வருகையால் கோயில் வளாகத்தில் ரசிகர்கள் பெருமளவில் கூடினார்கள்.

நேர்த்திக்கடனை நிறைவேற்றியது குறித்து சிந்து கூறும்போது, இந்தக் கோயிலுக்கு வருடம்தோறும் வருவேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் மீண்டும் வருவதாக வேண்டிக்கொண்டேன். அதனையொட்டி இப்போது வந்துள்ளேன். கடவுளின் அருள் வேண்டும் என்று வேண்டினேன். அதேபோல அனைவரின் நலனுக்காகவும் வேண்டினேன். என்றார்.




No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic