Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 28, 2016

அன்னை தெரசா மதம் மாற்றினார்! - வி.ஹெச்.பி குற்றச்சாட்டு


மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அனாதைகள் ஆசிரமம் நடத்தி வந்த மறைந்த அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்க வாடிகன் முடிவுசெய்துள்ளது. இதன் விழாவில் பங்குபெற இந்திய நிர்வாகிகள் செல்வதற்கு வி.ஹெச்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுகிழமை காலை "மான் கி பட்" ரெடியோ நிகழ்சியில் பங்கு பெற்று மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அன்னை தெரசா தொடர்பாக தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது "அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்ட வழங்க வாட்டிகன் முடிவு செய்துள்ளது. அன்னை தெரசா இந்தியாவில் வாழ்ந்து ஏழை எளிய மக்களுக்கு பல காலங்கள் சேவை புரிந்துவந்தார். அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது என்பது இந்தியர்களான நமக்கும் பெருமை சேர்ப்பதாகும். " என தெரிவித்தார். இதனை அடுத்து வாடிகனில் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் ஒரு குழு பங்கேற்க உள்ளது.

இதற்கு வி.ஹெச்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவ்வமைப்பின் சர்வதேச பொதுச்செயலாளர்  சுரேந்திர ஜெயின் கூறியதாவது "அன்னை தெரசாவின் சேவைகள் அனைத்தும் மதமாற்றத்தை மையமாக கொண்டே இருந்து வந்தது. அவர் சேவை என்கிற பெயரில் பலரையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியுள்ளார். வாடிகனில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கும் இந்தியக்குழுவை அனுப்பி வைப்பதற்கு முன்னால் இது தொடர்பாக அனைத்து தரப்பினரிடத்திலும் ஆலோசனை செய்திருக்க வேண்டும். தற்போது அவருக்கு புனிதர் பட்டம் கொடுப்பதும், அதை இந்தியா வரவேற்பதின் மூலம் மதமாற்றம் நடத்துவதற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுவிட்டதாக கருதிவிடுவார்கள். இதனால் வெளி நாடுகளிலிருந்து மதமாற்றம் செய்வதற்கு பண உதவி செய்யப்படும் செயலும் அதிகரிக்கும். இதன் மூலம் சமூகத்தில் அமைதி சீர்குலையும் என்பதே உண்மை.

பெரும்பாலும் புனிதர் பட்டங்கள் அற்புதங்கள் செய்பவர்களுக்காக வழங்கப்படுவது. இன்றைய காலகட்டத்தில் அப்படி அற்புதங்கள் செய்பவர்கள் யாரும் இல்லை. அப்படி நடக்கவும் சாத்தியம் இல்லை. அன்னை தெரசா மதமாற்றத்தில் ஈடுபடுகிறார் என்ற குற்றச்சாட்டை நாங்கள் பல ஆண்டுகளாகவே கூறி வருகிறோம். இப்பொழுது புதுசாக கூறுகிறோம் என யாரும் நினைத்துவிடக்கூடாது." என சுரேந்திர ஜெயின் கூறியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic