Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 28, 2016

சக்திமான் குதிரைக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் - ராபர்ட் வாத்ரா


சக்திமான் குதிரையால் பேச இயலாது என்றாலும் அதற்காக நான் குரல் கொடுப்பேன் என சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் டெஹ்ராடூனில் நடைபெற்ற பா.ஜ.க ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பு படை வீரர் ஒருவர் அமர்ந்திருந்த அரசு குதிரையான சக்திமானை பா.ஜ.க எம்.எல்.ஏ கணேஷ் ஜோஷி உருட்டுக்கட்டையால் அக்குதிரையை பலமாக தாக்கினார். இதனால் அக்குதிரையின் கால் உடைந்தது. தீவிர சிகிச்சைக்குபின் பலனில்லாமல் அக்குதிரை கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி இறந்து போனது.

குதிரை தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பூதகரமாகிப்போனது. எதிர்கட்சிகள், மிருகங்கள் நல காப்பகங்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் பா.ஜ.க எம்.எல்.ஏவுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பின. இதனை தொடர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். 


தற்போது கணேஷ் ஜோஷியை டெஹ்ராடூர் விமான நிலையத்தில் வைத்து சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ரா சக்திமான் குதிரை கொல்லப்பட்டது தொடர்பாக தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். இதற்கு கணேஷ் ஜோஷி தன்னை கடுமையான‌ வார்த்தைகளை பயன்படுத்தி  திட்டியதாகவும், மிரட்டியதாகவும் ராபர்ட் வாத்ரா பத்திரிகையாளர்களிடத்தில் தெரிவித்தார். சக்திமான் குதிரையால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை விளக்கி பேச முடியாது என்றும் அது தற்போது உயிருடன் இல்லை என்றாலும் அதற்கு நீதி கிடைப்பதற்காக தான் தொடர்ந்து குரல் எழுப்பப்போவதாக கணேஷ் ஜோஷியிடம் தெரிவித்ததாக ராபர்ட் வாத்ரா கூறினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic