Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 13, 2016

முஸ்லில் லீக் பிரமுகர் வெட்டி கொலை!


கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த ஜனவரி மாதம் இந்திய ஜனநாயக வாலிபர் பேரவை (DYFI) அமைச்சைச்சேர்ந்த துனேரி ஷிபின் பாஸ்கரன என்ற வாலிபர் நாதாபுரம் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பிரமுகர் அஸ்லம் என்பவரை சமீபத்தில் நீதிமன்றம் விடுவித்தது. நேற்று இரவு அஸ்லம் தனது நண்பர்களுடன் வெல்லூர் என்ற இடத்திற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்த போது நாடாபுரம் அருகே அவர்களை வழிமறித்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் காயமடைந்தார்.

சம்பவத்தை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அஸ்லம் உயிரிழந்தார்.  அவரது நண்பர்கள் இருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் இந்நிலையில் இக்கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் லீக் கட்சியினர் சார்பாக அப்பகுதியில் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அடைப்பின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்துவிடாமல் இருக்க காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே மாதத்தில் முஸ்லிம் லீக் கட்சியின் பிரமுகர் இருவர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic