தனது ஓய்வு அறிவிப்பை திரும்பப்பெறுவதாகவும், மீண்டும் அர்ஜெண்டினா அணிக்காக விளையாட வருவதாகவம் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் ஆன்ட்ரே மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறபோவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், ஓய்வு அறிவிப்பை திரும்ப பெற்றார். தற்போது மெஸ்ஸி மீண்டும் அர்ஜெண்டினா அணிக்கு திரும்புவதாக தகவல் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அமெரிக்கா கோபா கால்பந்து கோப்பையில் அர்ஜெண்டினா அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவித்து இருந்தார்.
மேலும் உலகக் கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிகள் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அவர் அணிக்கு திரும்புகிறார். இது தொடர்பாக மெஸ்ஸி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அர்ஜெண்டினா கால்பந்து அணியில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. மேலும் பிரச்சனைகளை உருவாக்க நான் விரும்பவில்லை. அர்ஜெண்டினா அணிக்கு பாதிப்பை ஏற்படுத்த விரும்பவில்லை. முடிந்த அளவில் உதவுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Write comments