Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 29, 2016

எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள்! பாரீஸ் ஹோட்டலில் நடந்த சம்பவம் (வீடியோ)


பாரீஸ்: பிரான்சு நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள உணவகத்திற்கு பர்தா அணிந்து வந்த இரண்டு இஸ்லாமிய பெண்களுக்கு உணவு வழங்கமுடியாது என துரத்தும் சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவையில் ஹோட்டலின் உரிமையாளருக்கும் அந்த இரு பெண்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் நடைபெறுகிறது. அதில் அந்த ஹோட்டல் உரிமையாளர் அந்த பெண்களை பார்த்து "எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்கள் தான், எல்லா  முஸ்லிம்களும் தீவிரவாதிகள் தான்" என கூறுகிறார்.

உன்னைப்போன்று இனவாதத்தை தூண்டுபவர்களின் ஹோட்டல்கள் எங்களுகு தேவையில்லை என அப்பெண்களில் ஒருவர் கூற, எந்த இனவாதியும் பிற மக்களை கொல்வதில்லை. உங்களைப்போன்ற ஆட்கள் எனது ஹோட்டலுக்குள் வரவே கூடாது" என விரட்டி அடிக்கிறார். இவ்வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பி.பி.சி தொலைகாட்சியும் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் பிரான்சு நாட்டின் நீஸ் நகரில் நடைபெற்ற பயங்கரவாத தாகுதலின் விளைவே இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கு காரணம் என்றும் அந்த ஹோட்டல் உரிமையாளரின் நண்பர் ஒருவர் கூட நீஸ் நகர தாக்குதலில் உயிரிழந்திருக்கிறார் என்ற ஆதங்கத்தில் அவர் இவ்வாறு நடந்துகொண்டார் எனவும் கூறப்படுகிறது.

இருந்த போதிலும் இச்சம்பவத்திற்கு அந்நாட்டு அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு மேற்கொண்டு விசாரணை நடத்துமாறும் உத்தரவிட்டுள்ளார். எனினும் இவ்விவகாரத்தை மேலும் பெரிதாக ஆக்கி ஹோட்டலுக்கு முன்பாக எவ்வித போராட்டங்களையும் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். 

 

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic