ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி, திரைக்கு வந்துள்ள படம் ‘அகிரா’. இது ‘மவுன குரு’ படத்தின் ‘ரீமேக்’. நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இதில் சோனாக்ஷி சின்ஹா துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறார்.
இதுபற்றி சோனாக்ஷி, “டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் முதன்முறையாக ஹீரோயினை மையமாக வைத்து எடுத்துள்ள படம் இது. நான் கதாநாயகியாக இதில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘அகிரா’ படத்துக்காக நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். இதுபோன்ற ஒரு படம் கிடைக்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சரியான நேரத்தில் இந்த அகிரா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு என்னைத் தேடிவந்தது. எனக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை அறிந்து இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இது சவாலான வேடம். நாட்டில் உச்சத்தில் இருக்கும் ‘ஆக்ஷன்’ நாயகர்களை இயக்கியவர் முருகதாஸ். அவரது படத்தில் நடித்திருப்பது பெருமை” என்று தெரிவித்திருக்கிறார்.
No comments:
Write comments