ஏக மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர். மேற்கு வங்கத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் ஆனார் மம்தா பானர்ஜி. அம்மாநிலத்தில் தனித்த சக்தியாக தமது கட்சியை நிலைநிறுத்தினாலும், அகில இந்தியளவில் தமது கட்சியை பரவலாக்க வேண்டும் என்பது அவரின் கனவுகளில் ஒன்று. ‘அந்த கனவு முழுமையாக நிஜமாகும் தருணம் நெருங்கியுள்ளது’ என்கின்றனர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர்.
ஆம், அக்கட்சி தேசியக்கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. தேர்தல் கமிஷனின் புதிய விதிப்படி, மக்களவையில் (நாடாளுமன்றம் லோக்சபா) இறுதியாக நடந்த தேர்தலில் 2% எம்.பி-களை குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் இருந்து பெற்றிருக்க வேண்டும் அல்லது மக்களவைத் தேர்தலிலோ, சட்டசபைத் தேர்தலிலோ செல்லுபடியான மொத்த வாக்குகளில் 6% வாக்குகளை பெற்று இருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் நான்கு நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் மாநிலக்கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்று இருக்க வேண்டும்.
இந்த வகையில், இந்தியாவில் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக காங்கிரஸ், பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய ஆறு கட்சிகளைத் தொடர்ந்து ஏழாவது கட்சியாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் தேசியக்கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ஆய்வு செய்வது என்று முடிவெடுத்துள்ளது தேர்தல் கமிஷன். அந்த அடிப்படையிலேயே இரண்டாவது முறையாக தொடர்ந்து மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்ததும், மணிப்பூர், அருணாச்சலப்பிரதேசம் மற்றும் திரிபுராவில் தமது கட்சியை நிலைநிறுத்திக் கொண்டதன் அடிப்படையிலும் இந்த அங்கீகாரத்தை அடைந்துள்ளது திரிணாமூல் காங்கிரஸ். இதன் துணைச் செயலாளர் முகுல்ராய், ‘எனக்கு முன்கூட்டியே இந்த தகவல் கிடைத்தது.

தற்போது உறுதியான தகவலைப் பெற்றதால் மிகுந்த மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார். அகில இந்தியளவில் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக 64 கட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments