தமிழகத்திற்கு இன்று முதல் 27ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்கும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு தமிழக விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றி ஆலோசிக்க இன்று கர்நாடக அமைச்சரவை கூட்டத்தை சித்தராமையா கூட்டினார். அதேபோல் மாலை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கும் சித்தராமையா அழைப்பு விடுத்து உள்ளார். இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், பாரதீய ஜனதா பங்கேற்காது என்று அம்மாநில பாரதீய ஜனதா தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
முந்தைய கூட்டங்களில் எதிர்க்கட்சியினரின் ஆலோசனைகளை சித்தராமையா புறக்கணித்ததாகக் குற்றம்சாட்டிய எடியூரப்பா, சட்டமன்றக் கூட்டத்தை தொடங்க வேண்டுமே தவிர, அனைத்துக் கட்சிக் கூட்டத்தினால் பயனில்லை என தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தையடுத்து விதான் சவுதா, முதல்வர் இல்லம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:
Write comments