Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 21, 2016

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க அமெரிக்கா தீவிரம்!

பாகிஸ்தான் நாட்டை தீவிரவாத நாடாக அறிவிக்க அமெரிக்காவைச்சேர்ந்த இரு சட்டவல்லுனர்கள் புதிய சட்டம் ஒன்றை உருவாக்கி அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.

இச்சமயம் முதல் பாகிஸ்தானிற்கு அமெரிக்கா செய்து வந்த அனைத்துவிதமான உதவிகளை நிறுத்திக்கொள்வதாக சட்டவல்லுனர்களின் கமிட்டி தலைவர் டெட் போயே தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளோம். இனி எந்த வித உடன்பாடுகளுக்கும் பாகிஸ்தானை அமெரிக்க நம்ப போவதில்லை. நாங்கள் இயற்றிய புதிய சட்டத்திற்கான ஒப்புதலை பெறுவதற்கு இதற்கான முழு அறிக்கை அதிபர் ஒபாமாவின் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இதற்கான பதிலை ஒபாமா அரசு மூன்று மாதங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். அதன் பிறகு இதற்கான முழு நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கஷ்மீரில் இந்திய இராணுவ தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அமைதிக்காக இந்தியா பல்வேறு நாடுகளுடன் நட்புறவு கொண்டு வருகிறது. இந்நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாது என போயே தெரிவித்தார்.

அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியினர்கள் அனைவரும் பாகிஸ்தானிற்கு எதிராக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic