Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 22, 2016

புர்கான் வானியை புகழ்ந்து பேசிய பாக் பிரதமர்!


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா பொது சபையின் 71வது கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகீதின் பயங்கரவாத இயக்க தளபதி புர்கான் வானியை இளம் தலைவர் என்று புகழ்ந்து பேசினார்.

தொடர்ந்து கஷ்மீர் வன்முறைகள் குறித்து பேசிய நவாஸ் ஷெரீப், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அமைதி, க‌ஷ்மீர் பிரச்னை தீர்க்கப்படாமல் ஏற்படாது. க‌ஷ்மீரில் இந்தியாவின் அட்டூழியங்கள் அடங்கிய கோப்புத்தொகுப்பை ஐ.நாவிடம் பாகிஸ்தான் வழங்கும் என்றும் ஷெரீப் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், பாகிஸ்தானும், பயங்கரவாதமும் பின்னிப் பிணைந்தது. ஐ.நாவில் பயங்கரவாதி புர்கான் வானியை ஷெரீப் புகழ்ந்து பேசியதன் மூலம் இந்த உண்மை வெளிப்பட்டுவிட்டது” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டில்,  பேச்சுவார்த்தை தொடர்பாக ஏற்றுக் கொள்ள முடியாத முன் நிபந்தனைகளை இந்தியா விதிக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் கூறுகிறார். இந்தியாவின் கோரிக்கை தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஒழிக்க வேண்டும் என்பதே. இதை பாகிஸ்தானால் ஏற்க முடியாதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், ஜெனிவாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பரும் பாகிஸ்தான் பிரதமர் பேச்சு அதிர்ச்சி அளிப்பதாகவும், பாகிஸ்தான் சுயசாட்சியத்தை நவாஸ் ஷெரீப்பின் பேச்சு உணர்த்துவதாகவும் தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic