Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 22, 2016

உரி தாக்குதலுக்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி!


கஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் இந்திய இராணுவ தலைமையகம் மீது  கடந்த 18–ந் தேதி அதிகாலை உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்ட உரி இராணுவ முகாமுக்குள் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற ஜெய்ஷ்-இ-முகமது இயக்க பயங்கரவாதிகள் நுழைந்தனர். அவர்கள் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் நடத்திய தாக்குதல்களில் இராணுவ வீரர்கள் 18 பேர் வீரமரணமடைந்தனர்

இதுகுறித்து இராணுவ உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ரன்பிர் சிங் கூறுகையில், ஆரம்பக் கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஜெய்‌ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது தான் உண்மை தெரிய வந்துள்ளது. லஷ்கர் தீவிரவாதிகள் இராணுவ தலைமையகத்தின் கம்பி வேலிகளை இரண்டு இடங்களில் துண்டித்து 150 மீட்டர் தூரம் இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தாக்குதல் குறித்த ஆதாரம் பாகிஸ்தான் தூதரிடம் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் வழங்கியுள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல் சதி திட்டம் பாகிஸ்தானில் நடைபெற அனுமதிக்க மாட்டோம் என அந்நாடு உறுதி அளித்திருந்ததையும் ஜெய்சங்கர் சுட்டிக் காட்டியுள்ளார்.

உரி தாக்குதலில் பழி தீர்க்கும் விதமாக இராணுவ வீரர்கள் எல்லை தாண்டி சென்று, 20 தீவிரவாதிகளை கொன்று குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த தாக்குதலில் 200 தீவிரவாதிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் விரட்டி அடிக்கபட்டு உள்ளனர். இதனால் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே தனது படைகளையும் பாகிஸ்தானும் குவித்து வருகிறது.

க‌ஷ்மீரின் வடக்கு பகுதி நெடுகிலும் படைகளை குவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதே போல் ராஜஸ்தான். மாநிலத்தில் மேற்கு பகுதியிலும் பாகிஸ்தான் படைகளை குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic