Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 9, 2016

தாமிரபரணியை நாசமாக்கிவிட்டு காவேரி நீரை கேட்பதில் அர்த்தம் இல்லை...!



காவேரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்திற்கும் கர் நாடகத்திற்மிடையே காவேரி பிரச்சனை வெகு ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. இப்பிரச்சனையில் பா.ஜ.க உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் இரட்டை வேடமே போட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள பா.ஜ.கவினர் திறந்துவிடப்பட்ட தண்ணீர் போதுமானதாக இல்லை என அறிக்கைகள் வெளியிட, கர்நாடக பா.ஜ.க தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறது. தேசிய கட்சிகளின் நிலைபாடு இவ்வாறு இருக்க பிராந்திய கட்சிகளும் காவேரி பிரச்சனையை அரசியல் பிரச்சனையாக மாற்றி லாபம் தேட முயற்சித்து வருகின்றனர்.

காவேரியில் தண்ணீர் திறந்துவிடமாட்டோம் என கர்நாடக அரசு உறுதியாக கூற, தமிழக அரசு வேறு வழியின்றி உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஒரு அரசால் எதை செய்ய இயலுமோ அதைதான் தமிழக அரசு செய்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இதனையுன் அரசியலாக்க முயற்சிக்கும் திமுகவின் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் காவேரி பிரச்சனையில் திமுக எவ்வளவு தீவிரமாக கையாண்டதோ அதே போல் ஜெயலலிதா அரசு நடந்து கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். இப்படியாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் நடக்கும் பிரச்ச்னைகளை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ளவே முயற்சித்து வருகிறார்கள்.

அதிலும் சில அரசியல் கட்சி தலைவர்கள் அனைத்து நதிகளை ஒன்றினைக்க வேண்டுமென்று கூறுகின்றனர். இது எந்தளவிற்கு சாத்தியமானது என்பது கேள்விக்குறியே...? காரணம் ஒரு மாநிலத்திலிருந்து உருவாகும் நதியிலிருந்து நீர் திறந்துவிடுவதற்கே பிரச்சனை எழுந்து அதை சமாளிக்க மத்திய அரசுகள் திண்டாடி வரும்போது ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் நதிகளை இணைக்க வேண்டுமென்றால் அத்துனை மாநில மக்களும் கொதித்தெழுந்து போராடத்துவங்கிவிட்டால் நாட்டின் அமைதி முற்றிலுமாக சீர்குழைந்துவிடும் என்பதே நிஜம்.

பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறும்போது காவேர் நீருக்காக தமிழகம் புலம்பிக்கொண்டிருக்கக்கூடாது, மாற்றுவழிகளை தேட வேண்டும். கடல் நீரை குடி நீராக்கி, விவசாயத்திற்கு தேவையான, மற்ற உபயோகத்திற்கு தேவையானை நீரை அதிலிருந்து பூர்த்தி செய்வதற்கான முயற்சியி இறங்க வேண்டும் என தெரிவித்தார். இவரின் இந்த கருத்துக்கு தமிழகத்திலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தாலும் சற்று சிந்திக்க வேண்டியுள்ளது என்பதாகவே தோன்றுகிறது.

காவேரி நதி இருவருக்கும் சொந்தம் என சண்டைப்போட்டு வருகிறோம். ஆனால் இதனை முற்றிலுமாக மறுக்கும் கன்னடத்தினர் இரத்தத்தை வேண்டுமானால் தருகிறோம், சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என வீர வசனம் பேசுகின்றனர். இயற்கை என்பது அனைவருக்கும் பொதுவானதே. அது ஏதோ ஒரு மா நிலத்தின் மீது மட்டும் அன்புகாட்டுவதல்ல. மழை என்பது எல்லா மாநிலங்களுக்கும் பொதுவாகவே பொழிகிறது. தங்கள் மாநிலத்தில் பொழியிம் மழையினை நன்றாக பாதுகாத்து அதன் மூலம் பயனடைகிறார்கள். இவ்விசயத்தில் தமிழகம் தோற்றுவிட்டது என்பதை உணரலாம். தமிழகத்திற்கு மட்டுமே சொந்தமான தாமிரபரணி ஆற்றின் நிலையை பார்த்தால் கண்களில் நீர் வழந்தொடுகிறது. அதனை முறையாக பராமரித்து வந்தாலே போதுமானது, பிற மாநிலங்களில் கையேந்த தேவையே இல்லை.

நம் சொத்துக்களை பாதுகாக்க தவறிவிட்டு அடுத்தவன் சொத்திலிருந்து பங்கு வேண்டுமென கேட்பது போல் உள்ளது காவேரியில் தண்ணீர் கேட்பது. காவேரியில் உரிமை கொண்டாடக்கூடாது என்று சொல்லவில்லை ஏன் தாமிரபரணியை நாசமாக்கிவிட்டோம் என்றுதான் கேட்கிறோம். தாமிரபரணியை காக்க பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தும் அளவிற்கு நிலமை சென்றபோதும் அரசு உறங்கிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஆற்றின் மணல்கள் திருடு போவது முதல் ஆற்றப்பகுதியில் ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மை என தாமிரபரணியை கொலை செய்யும் செயல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

நமது நதியினை பாதுகாப்போம்! தன்னிலை அடைந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்! என்ற மாபெரும் எழுச்சி உருவாக்கப்பட வேண்டும்.

- முத்து

- முத்து

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic