Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 18, 2016

உரி தாக்குதல் நடத்தியவர்களை சும்மா விட மாட்டோம்! - மோடி

 
ஜம்மு கஷ்மீர் உரி பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர்கள் 17 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை சும்மா விடப்போவதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உரி தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் நிலைமை குறித்து கேட்டரிந்தார். எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து நேரில் ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், இராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "இந்த தாக்குதல் கோழைத்தனமானது, இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டையே துயரத்தில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை சும்மா விடப்போவதில்லை" என தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic