உரியில் இராணுவ தலைமை மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் பாகிஸ்தானை "பயங்கரவாத நாடு" என்றும் அதனை அனைவரும் தனிமைப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஜம்மு கஷ்மீர் உரியில் இராணுவ தலைமை அலுவலகம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 17 இராணுவ வீரர்கள் கொல்லபப்ட்டனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்னாத் சிங் தனது அமெரிக்க மாற்றும் ரஷியா பயணத்தை ரத்து செய்துவிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இராணுவ தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய நான்கு தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. கடந்த பத்து வருடங்களில் அதிக இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது இந்த தாக்குதலின் போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுடனான இந்தியாவில் உறவு கஷ்மீர் பிரச்சனையின் போது முற்றிலுமாக சிதைந்துவிட்டது. கஷ்மீரில் வன்முறையை பாகிஸ்தானே தூண்டிவருவதாகவும் இதனாலேயே கஷ்மீரில் அமைதியில்லாத சூழ் நிலை இருந்துவருவதாகவும் ராஜ்னாத் சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசு பாலோசிஸ்தானிலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதாக ஐ. நா சபையில் இந்தியா குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments